ஜனாதிபதி பதவிக்கால விவகாரம்: ரணிலால் முன்வைக்கப்பட்ட யோசனை
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலையை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் ஜனாதிபதி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
மதவாச்சியில், இன்று (05.07.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக ஒரு இடத்தில் 5 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமூலம்
அதேபோன்று, அதன் மற்றுமொரு இடத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையில் இது தொடர்பான யோசனை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார்.
எனவே, விரைவில் இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam