சுமந்திரனின் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய ரணில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொழும்பு - தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று (27.02.2024) சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.
முதுகுத்தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாக சுகயீனமாக இருந்த அவர், உலகை விட்டுப் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரனின் வீட்டிற்கு இன்று சென்ற ஜானாதிபதி சுமந்திரனின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை, சுமந்திரனின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
