மக்கள் போராட்டத்தை ஒடுக்கவே ரணிலை அரியணை ஏற்றினோம்:சனத் நிஷாந்த
மக்கள் போராட்டத்தை (அரகலய) அழிப்பதற்கான ஒரு ஆயுதமாகவே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்தோம் என்று ராஜபக்சக்களின் சகாவான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச ஆதரவுக் கலைஞரான இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் உள்ள 'கோட்டா கோ ஹோம்' தளத்தில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய குண்டர் கும்பலை வழிநடத்தியதற்காக நிஷாந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்கின்றார்.
பொது எதிர்ப்பு இயக்கம்

இந்த நேர்காணலில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது, "ரணில் விக்ரமசிங்க பொது எதிர்ப்பு இயக்கமான 'அரகலய'வுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக நாங்கள் அவரை அழைத்து வந்தோம்.
'அரகலய' மக்கள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். அது நன்றாகப் போய்க்கொண்டிருக்கின்றது.
'அரகலய' மீது தாக்குதல் நடத்தவே அவர்
நியமிக்கப்பட்டார்"என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri