பெருந்தோட்ட பிள்ளைகளின் கல்வியில் விசேட கவனம்: ஜனாதிபதி உறுதி
பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
நுவரெலியா (Nuwara Eliya) - கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நாங்கள் அனைவரும் மிகவும் கடினமான காலத்தை கடந்து வந்துள்ளோம். இதன்போது, பெருந்தோட்ட மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் அறிவோம்.
ஆனால், சிரமங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தேயிலைக் கொழுந்து பறிப்பதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களித்தனர்.
2023ஆம் ஆண்டிலும் 2024ஆம் ஆண்டிலும் தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றோம். அதற்கு ஜனாதிபதி என்ற வகையில் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அத்துடன், பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு விஞ்ஞானப் பாடங்களை கற்பிக்க தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குறுகிய காலத்தில் இ.தொ.கா 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது: செந்தில் தொண்டமான் பெருமிதம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |