மொட்டுடன் சங்கமித்து ஜனாதிபதி வேட்பாளராகவுள்ள ரணில்: சாகர காரியவசம் நம்பிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் கூறுகையில், "அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராகி ஜனாதிபதி வேட்பாளராக வரலாம்.
ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே முன்னிறுத்துவது எமது நோக்கமல்ல. ஜனாதிபதித் தேர்தல் வரும்போது நாட்டு மக்கள் எப்படிப்பட்ட வேட்பாளரை எதிர்பார்க்கின்றார்கள் என்பதைக் கணிக்க முடியாது.
அதற்கமைய, மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
அந்த வேட்பாளர் நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராக இருப்பார் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
