இராணுவ பலத்துடன் ரணிலின் புது வியூகம்! சிரேஷ்ட விரிவுரையாளர் பகிரங்க குற்றச்சாட்டு (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவத்தின் உயர் பலனை பயன்படுத்தி தான் தனது ஆட்சியை முன்னெடுத்து செல்கிறார் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அல்ல. அவர் இராணுவத்தின் உயர் பலனை பயன்படுத்தி தான் தனது ஆட்சியை முன்னெடுத்து செல்வதை பார்க்க கூடியதாக உள்ளது.
நாட்டில் இடம்பெறும் மக்கள் போராட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவத்தை பயன்படுத்தியே அடக்குகின்றார்.
இவ்வாறு தான் காலம் காலமாக எமது ஆட்சியாளர்கள் அவர்களின் சுயநலனுக்காக இவ்வாறானதொரு பாரிய இராணுவ கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் முடிந்து 13 வருடங்களாகி விட்டன.பொதுவாக யுத்தம் முடிந்த பின்னர் நாடு படிப்படியாக இராணுவத்தை குறைக்க வேண்டும் .
ஆனால் யுத்தத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கம் தங்களின் சுயநலனுக்காக இராணுவத்தை இன்னும் பெரிதாக்கி, பாரிய நிதிகளை அதற்கு ஒதுக்கிய கொள்கைகள் தான் காணப்பட்டது.



