ரணில் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்! கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அழுத்தம்
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றகன்.
கடந்த அரசாங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்கள், ஜனாதிபதி ஆணைக்குழு, உடன்படிக்கைகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்கள் இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டில் மட்டுமல்லாது உலக பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் நன்கறிந்த, அனுபவமுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ள நாடாளுமன்ற அனுபவங்கள், வேறு எவரிடமும் இல்லையெனவும் அவர்கள் இதன் போது மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தற்போது வரைக்கும் அந்த பதவிக்கு ஒருவம் தெரிவுசெய்யப்படாத நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லுமாறு சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri