அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களை சந்தித்த ரணில்
உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (19.01.2024) இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பு கலந்துரையாடல்
இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, தன்சானியா பிரதமர் காசிம் மஜலிவா, பஹமாஸ் பிரதமர் பிலிப் ஈ. டேவிஸ், எத்தியோப்பியா பிரதமர் அபே அஹமட், பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதா ஆகியோரை சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் இந்தச் சந்திப்புக்களின் போது கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam