நேபாள பிரதமரை சந்தித்த ரணில்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியை இன்று வியாழக்கிழமை பாலுவாதரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் சந்தித்துள்ளார்.
நேபாள பிரதமரின் செயலக தரப்பு தகவலின்படி, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் தமது இரண்டு நாடுகளின் பரஸ்பர நலன்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க
நேபாள காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினரான தொழிலதிபர் பினோத் சவுத்ரியும் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று அந்நாட்டு பிரதமர் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் சர்மா ஒலியின் நீண்டகால நண்பரான விக்ரமசிங்க, டிசம்பர் 28 அன்று தனிப்பட்ட பயணமாக நேபாளத்திற்கு வந்தார் என்றும், இன்று நாடு திரும்ப உள்ளார் என்றும் நேபாள தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |