மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி இணக்கம்
அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3,000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.
எனவே, இந்த நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
9 தமிழ் எம்.பிக்கள்
மலையகத்துக்கான முக்கியத்துவமிக்க அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது மக்கள் பிரதிநிதிகளை அரவணைத்துக்கொண்டு, அவர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி செயற்படவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் எதிர்பார்க்கின்றார்.
இதற்கான அழைப்பையும் அவர் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் 9 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
