கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் ஒன்றுகூடிய 3 ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத்தின் மகனின் திருமண வைபவம் நேற்று முன்தினம் கொழும்பு ஷெங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த விருந்தில் முக்கியஸ்தர்கள், உயர்மட்ட வர்த்தக சமூகத்தினர், பொதுஜன பெரமுன அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மூன்று ஜனாதிபதிகள் கலந்து கொண்டமை இங்கு காணப்பட்ட மிகவும் விசேட நிகழ்வாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த மூவரும் பசில் ராஜபக்ஷவும் ஒரே மேசையில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் அதி உயர்தர மதுபானம் மற்றும் அதிஉணவுகள் வழங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களான தலதா அத்துகோரள, ஜே.சி அலவத்துவல மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam