மொட்டுக் கட்சியில் இணைந்த ரணில்: ஜீ.எல்.பீரிஸ் பகீர் தகவல்-செய்திகளின் தொகுப்பு
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்கு அரசு தீர்மானித்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“உரிய திகதி ஒன்றைத் தீர்மானிக்காது சட்டவிரோத காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள்.
அரசின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுப்போம்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மொட்டு கட்சி உறுப்புரிமையை பெற்று விட்டார் என்பதையே மகிந்த ராஜபக்சவின் உரை உணர்த்துகின்றது என ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,