யாழ். நாக விகாரையில் ஜனாதிபதி! (Photos)
தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ். ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாராதிபதி வணக்கத்துக்குரிய மீகஹஜந்துரே சிரிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி, அவரின் உடல் நலன் குறித்தும் கேட்டறிந்ததோடு சிறிது நேரம் அவருடன் உரையாடினார்.
ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரால் செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.
'பௌத்த இந்து சமய மன்றம்' சார்பில் ஜனாதிபதியை அதன் தலைவர் கலாநிதி எம்.மோகன் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 7 மணி நேரம் முன்
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam