ரணிலுக்கு எதிராக சர்வதேசத்தில் திட்டமிடப்பட்ட சதி! சர்ச்சைக்குரிய நேர்காணல் தொடர்பில் வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்ற சர்வதேச ஊடக நேர்காணலானது, பத்திரிகை வேடமிட்டு நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் என முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பங்கேற்றிருந்த சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் கேள்விகள் கேட்கப்பட்ட விதம் மற்றும் அவர் பதில் வழங்கிய விதம் என்பன பல்வேறு வகையில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில், இந்த நேர்காணல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் வகையில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள்
இது குறித்து அவர் கூறுகையில், நேர்காணல் செய்பவர் நியாயமான விவாதத்தை விட நேரடி விசாரணையை நடத்தியுள்ளதாக சப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், "இது பதில்களைப் பெறுவது பற்றியது அல்ல. பத்திரிகை பற்றியது அல்ல. இது ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைப்பது பற்றியது" என்று அவர் கூறியுள்ளதுடன் குறித்த செய்தியாளரின் அணுகுமுறை விரோதமானது மற்றும் பாரபட்சமானது என்றும் விமர்சித்துள்ளார்.
அதேவேளை, இந்த நேர்காணலின் போது ரணிலுக்கு விரோதமான சூழலை உருவாக்கும் வகையில் பார்வையாளர்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அலி சப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
அது மாத்திரமன்றி, "ரணிலை ஒரு எதிரி பிரதேசத்தில் இருப்பது போல் உணர வைக்க, இலங்கைக்கு எதிரான விரோதமான பார்வையாளர்கள் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த, நிகழ்வு எவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஜெலென்ஸ்கிக்கு அடுத்த நெருக்கடி... அமெரிக்காவால் ஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சிக்கலில் News Lankasri
