ரணிலின் இந்திய விஜயம்: இருதரப்பு பேச்சுவார்த்தை நிரலில் தமிழர் விவகாரம்
இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் தனது பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கியஸ்தர்களுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகளுக்கு உறுதி
தனது விஜயத்திற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீளாய்வு செய்யப்படும் என விக்ரமசிங்க தமிழ் கட்சிகளுக்கு உறுதியளித்திருந்தார்.
#WATCH | On Sri Lankan President Ranil Wickremesinghe's visit to India, MEA Spokesperson Arindam Bagchi says, "It is a neighbouring country with whom we have very important relationships. We have multi-faceted relations. He is arriving today...This is his first visit as the PM.… pic.twitter.com/VUwthTMMu6
— ANI (@ANI) July 20, 2023
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் அண்டை நாடுகளின் முதல் கொள்கை மற்றும் "விஷன் சாகர்" திட்டம் ஆகியவற்றில் இலங்கை ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும் மற்றும் மேம்பட்ட இணைப்பு மற்றும் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராயும் ஒரு சந்தர்ப்பம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Warm welcome to President @RW_UNP of Sri Lanka on his maiden visit to India since assumption of the Office of President.
— Arindam Bagchi (@MEAIndia) July 20, 2023
Received by @MOS_MEA at the airport.
The visit will further boost the multi-pronged ??-?? partnership. pic.twitter.com/AKZbauUzlo
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதையும் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ரணிலின் விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் தமிழர் விவகாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் வழங்கல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்கள் இந்திய ஒப்பந்தங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரூபா இலங்கையில்
1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், அந்நியச் செலாவணி கையிருப்புகளின் கடுமையான பற்றாக்குறையால், இலங்கை கடந்த ஆண்டு முன்னேற்றம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.
Honoured to call on President Ranil Wickremesinghe of Sri Lanka during his India visit.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 20, 2023
Confident that his meeting with PM @narendramodi tomorrow will further strengthen our neighborly bonds and take forward India’s Neighbourhood First and SAGAR policies.@RW_UNP pic.twitter.com/BiHsgVbhqG
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்கள் எழுச்சியில் கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
மேலும் PTI அறிக்கையின்படி, இலங்கையின் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான விக்ரமசிங்க, கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்துவதை விரும்புவதாகக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
