தனது அரசியல் பயணத்தை எவரும் தீர்மானிக்க முடியாது: விமலின் கருத்துக்கு ரணில் பதிலடி
ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிவது தொடர்பில் விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார் என அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார்
என்றும், ஏதேனும் சர்வதேச அமைப்பொன்றில் முக்கிய பதவியொன்றைப் பெற்று
ஓய்வுகாலத்தைக் கழிக்கவே ரணில் விக்கிரமசிங்க முற்படுவார் என்றும் தேசிய
சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கடந்த
இரு நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
விமலின் இந்தக் கருத்து தொடர்பில் நேற்று ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின்போது பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.
ரணிலின் பதில்
இதன்போதே ஜனாதிபதி மேற்படி பதிலை வழங்கினார் என்று அந்த அமைச்சர் கூறியுள்ளார்.
"நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பேன்.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து தற்போது அவசரப்பட மாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிவது தொடர்பில் விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாது.
ஆளும் கட்சியிலிருந்து எதிரணிப் பக்கம் பாய்ந்தவர்களும், எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களும் எனது அரசியல் பயணத்தை ஏதோவொரு வழியில் முடக்க முயற்சிக்கின்றனர்.
அவர்களால் எனது அரசியல் பயணத்தை ஒருபோதும் முடக்க முடியாது. நீங்களும் அவர்களின் பொறிக்குள் சிக்கிவிடாதீர்கள்.
அரசியலில் நான் தொடர்ந்து இருப்பதா? இல்லையா? என நான்தான் முடிவு எடுப்பேன்." என ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் குறிப்பிட்டார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
