வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசாங்கம்

Missing Persons Sri Lankan Tamils Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Kirupa Nov 14, 2023 12:57 AM GMT
Report

வலிந்து காணாமல் ஆக்கிய குற்றங்களை மேற்கொண்டுள்ளதை தாமே ஒப்புக்கொள்ளும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கான மற்றுமொரு திட்டமாகவே இலங்கை அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இழப்பீட்டிற்கான நிதி ஒதுக்கும் நடவடிக்கை அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்திடம் நீதி கேட்டு, அந்த முயற்சி தோல்வி கண்ட நிலையிலேயே தாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசாங்கம் | Ranil Govt Admits Guilt About Missing People

போராட்டத்தை குழப்பும் இலங்கை அரசின் முயற்சி

தமது உறவுகளைத் தேடும் போராட்டம் 2, 500 நாட்களை அண்மித்துள்ளதாகவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி கோரிய தமது போராட்டத்தை குழப்புவதற்கும் நோக்குடன் இழப்பீடுகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து ஸ்ரீலங்காவின் கடந்த அரசுகள் முயற்சித்த போதிலும் தமது போராட்டம் சர்வதேச நீதியை வேண்டி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இயக்கச்சியில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)

உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இயக்கச்சியில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)


இந்த நிலையில் தமது போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியாக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.

ஓ.எம்.பி பெயரில் வீணடிக்கப்பட்ட பணம்

ஓ.எம்.பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் ஊடாகவும் தமக்கு இழப்பீடு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு வெளிநாடுகளால் 1.4 ரில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அந்தப் பணமானது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசாங்கம் | Ranil Govt Admits Guilt About Missing People

பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளுக்கான சம்பளமாகவும், அவர்களுக்குரிய கொடுப்பனவு, கட்டட வசதிகளுக்கே செலவு செய்யப்பட்டதாகவும் லீலாதேவி ஆனந்தநடராஜா சுட்டிக்காட்டினார்.

அந்த பணமானது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் கார் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

பிரான்சில் கார் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி


குற்றமிழைத்த கடந்த கால இலங்கை அரசுகள்

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கென வரவு செலவுத் திட்டத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்திருப்பதானது, தமது குற்றத்தை ஒப்புக்கொள்வதை போன்றே அமைவதா லீலாதேவி ஆனந்தநடராஜா கூறியுள்ளார்.

உறவொன்று காணாமல் போனால், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே முதலில் அறிய வேண்டும் எனவும் எனினும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு கடந்த கால அரசுகளே காரணம் என்பதை இந்த நிதி ஒதுக்கீடு மூலம் மறைமுகமாக ரணில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறு எந்தவித விசாரணைகளைப் பற்றியும் கதைப்பதை விடுத்து, நேரடியாக இழப்பீட்டை வழங்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றே தீர்மானிக்க வேண்டியுள்ளது என லீலாதேவி ஆனந்தநடராஜா கூறியுள்ளார். 

அமெரிக்கா வசமான இலங்கை புலனாய்வுத்துறை - திரிசங்கு நிலையில் இந்தியா (Video)

அமெரிக்கா வசமான இலங்கை புலனாய்வுத்துறை - திரிசங்கு நிலையில் இந்தியா (Video)


இழப்பீடு அல்ல, உறவுகளே வேண்டும்

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் ஒப்படைத்த, சரணமடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட உறவுகளையே தேடிக்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசிடம் இருந்து எந்தவொரு இழப்பீட்டையும் தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர்களிடம் பெறப் போவதும் இல்லை எனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசிடம் இருந்து நீதியே கிடைக்காது என முடிவுக்கு வந்த தாம், அவர்களிடம் இருந்து இழப்பீட்டை எதிர்பார்க்கப் போவதில்லை எனவும் லீலாதேவி ஆனந்தநடராஜா சுட்டிக்காட்டினார்.

இந்த இழப்பீட்டானது, ஸ்ரீலங்கா அரசின் வேறு தேவைகளுக்காக தமது பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US