சம்பந்தன் அணியின் ஒத்துழைப்பு ரணில் அரசுக்கு தேவையில்லை : அமைச்சர் பிரசன்ன
சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்குத் தேவையில்லை என்று அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
'வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்' - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார் என்று சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்கள்
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.
அவர்களின் வியூகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லை. அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் எடுத்துச் செயற்படும் ஜனாதிபதி ரணில், அதற்கான இலக்கை அடையும் தருவாயில் அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து அதிலும் வெற்றி காண்பார். இதற்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்." - என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan