பிரதமர் ஆசனமாக மாறும் சாத்தியம்! ரணில் பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஏற்படும் மாற்றம் குறித்து தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த நாடாளுமன்ற ஆசனம், பிரதமர் ஆசனமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ரணில் நாட்டை பொறுப்பேற்று 48 மணித்தியாலங்களிலேயே அனைத்து விதமான வரிசைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அரசாங்கமொன்று அமையுமானால் சர்வதேசத்தின் உதவிகள் உடனடியாக கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.