ஜனாதிபதி தேர்தலில் வெல்வதே ரணிலின் பிரதான இலக்கு : சுரேஷ் பிரேமச்சந்திரன்

Ranil Wickremesinghe Suresh Premachandran Narendra Modi
By Theepan Jul 30, 2023 03:51 PM GMT
Report

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை விட ஜனாதிபதி தேர்தலில் வெல்வதே ரணிலின் பிரதான சிந்தனை என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு இன்று(30.07.2023)வெளியிட்ட  அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியின் டெல்லி விஜயத்தைத் தொடர்ந்து, 24.07.2023 அன்று மாலை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரனையும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களையும் தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

13ஆவது திருத்தம்

ஜனாதிபதி தேர்தலில் வெல்வதே ரணிலின் பிரதான இலக்கு : சுரேஷ் பிரேமச்சந்திரன் | Ranil Goal Win Presidential Election Premachandran

இந்தச் சந்திப்பின்பொழுது, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ,கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை தாம் நியமித்திருப்பதாகவும் அவர்களினூடாக 13ஆவது திருத்தம் தொடர்பாக பேசி நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதுடன்,  விக்னேஸ்வரன் உள்ளிட்ட 5 பேரையும் தாம் நியமித்த மூன்றுபேரை உள்ளடக்கிய குழு இவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டது.

இவை தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் 26ஆம் திகதி அன்று மாலை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைத்திருந்தார். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஜேவிபியையும் தவிர, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ்க் கட்சித் தலைவர்கள், வடக்கு-கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் கட்சி தலைவர்கள் மற்றும் ஏனைய சிங்கள கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

மாகாணசபை தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் வெல்வதே ரணிலின் பிரதான இலக்கு : சுரேஷ் பிரேமச்சந்திரன் | Ranil Goal Win Presidential Election Premachandran

குறிப்பாக இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும் தமிழ் மக்களுக்கு எவ்வித அதிகாரங்களும் பகிரப்படக்கூடாது என்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவே கூடாது என்றும் 13ஆவது திருத்தம் தேவையற்றது என்றும் கூறுகின்ற சிங்கள பௌத்த இனவாதக் கருத்துகளையே தொடர்ந்து பேசிவருகின்ற சரத் வீரசேகர, விமல்வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். தமிழர் தரப்பைப் பொறுத்தவரை 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும் மாகாணசபைத் தேர்தல்களை உடன் நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என்றும் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி அதுபற்றி யோசிக்கலாம் என்றும் மேற்கண்ட இனவாத தலைவர்கள் கூறினார்கள். ஏனைய சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரையில், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் ஒத்துழைப்பதாகக் கூறினார்கள். அப்படி இருந்தபொழுதும் கூட, உங்களுக்கு மாகாணசபைத் தேர்தல் தேவையா? அதிகாரப்பகிர்வு தேவையா என்ற கேள்வியை முன்வைத்து ஜனாதிபதி கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தமையானது அவர் உண்மையிலேயே 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய பிரதமர் கருத்து

ஜனாதிபதி தேர்தலில் வெல்வதே ரணிலின் பிரதான இலக்கு : சுரேஷ் பிரேமச்சந்திரன் | Ranil Goal Win Presidential Election Premachandran

ரணில் விக்ரமசிங்க அவர்களைப் பொறுத்தவரையில், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதென்பதே அவரது பிரதானமான சிந்தனையாகும். அதற்குப் பங்கம் வரக்கூடிய எவ்வித நடவடிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையைப் பொருளாதார சரிவிலிருந்து மீட்பதற்காக 4பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கிய இந்திய பிரதமரை ரணில் விக்ரமசிங்க அவர்கள் டெல்லியில் சந்தித்தபொழுது, 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதை இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.

ஆகவே இந்திய பிரதமரையும் பகைத்துக்கொள்ளக்கூடாது, வடக்கு-கிழக்கு, மலையக மக்களின் வாக்கு வங்கிகளையும் இழந்துவிடக்கூடாது, சிங்கள பௌத்த வாக்கு வங்கியையும் பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற கணக்கில் காலம் கடத்துவதே ஜனாதிபதியின் நிலைப்பாடா? என்ற கேள்வி எழுகின்றது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது 1988ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களால் அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட்டது. ஆகவே அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம் அவசியம்தானா? என்ற கேள்வியும் எழுகின்றது.

அதிகாரப்பகிர்வு

ஜனாதிபதி தேர்தலில் வெல்வதே ரணிலின் பிரதான இலக்கு : சுரேஷ் பிரேமச்சந்திரன் | Ranil Goal Win Presidential Election Premachandran

மாறிமாறி சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தமிழ் மக்களும் இந்த நாட்டின் சிங்கள மக்களைப் போன்றே பூர்வீகக் குடிகளாவர். அவர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதற்கும் தமது பிரதேசத்தைத் தாமே அபிவிருத்தி செய்துகொள்வதற்கும் சகல உரித்துகளையும் கொண்டவர்கள். அவர்கள் தங்களுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் மாகாணசபை முறைமை. ஆனால் வடக்கு-கிழக்கிற்கு மட்டும் அதனை மட்டுப்படுத்தாமல் சிங்கள பகுதிகளையும் இணைத்து ஒன்பது மாகாணங்களுக்கானதாக ஜே.ஆர். ஜெயவர்த்தன மாற்றியமைத்தார்.

இப்பொழுதும்கூட, வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள்தான் தமக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்பது மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு பற்றி ஜனாதிபதி அவர்கள் பேசுவது அர்த்தமற்றது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை, பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் உட்பட ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வு என்பது அவசியமானது. இவை சிங்கள பகுதிகளுக்குத் தேவையா இல்லையா என்பதை ஜனாதிபதியோ, அரசாங்கமோ தீர்மானிக்கலாம். ஆனால் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு இவை தேவை என்பதை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் தங்களது பிறப்புரிமையான அதிகாரங்களைக் கேட்கிறார்களே தவிர, உங்களிடம் யாசகம் கேட்கவில்லை. தருவதற்கோ மறுதலிப்பதற்கோ உங்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இந்த நாட்டின் எதிர்காலம் என்பது இருள் மயமானதாகவே இருக்கும் என்பதை அரசாங்கமும் சிங்கள இனவாத சக்திகளும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஜனாதிபதி அவர்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளைக் கைவிட்டு, 13ஆவது திருத்தத்தை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் முழுமையாக நிறைவேற்ற முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US