லண்டனுக்கு பறக்கும் ரணில்: உலகத் தலைவர்களுடன் பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நாளைய தினம் (04.05.2023) புறப்படும், ஜனாதிபதி ரணில், எதிர்வரும் சனிக்கிழமை லண்டன் - வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
லண்டனின் புராதனமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
1953ஆம் ஆண்டு, மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 8 ஆயிரத்து 200 பேரிலிருந்தும் இம்முறை கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 200 பேருக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக உள்ளார்.
நிகழ்வில் போது உலகத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
