ஜனாதிபதியாக ரணில் பதவியேற்ற பின்னர் சென்ற முதல் இடம்
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றுள்ளார்.

கலந்துரையாடல்
இதன்போது, நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து சுருக்கமான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில், அமைச்சர் திரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
| ரணில் ஜனாதிபதியானது தொடர்பில் சந்திரிகா வெளியிட்டுள்ள பதில் |
| ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தவுடன் ரணில் வழங்கிய முதல் நியமனம் |