தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம்: ஜனாதிபதி பணிப்புரை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை குறைந்தபட்சம் 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இது தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று(08.12.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,
மேலும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு கேட்டக்கொள்கின்றேன்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டநிறுவனங்கள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
எதிர்கால நடவடிக்கை
இதற்கமைய எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம்.
தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவை நியமிக்கவும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்னுமொரு குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்
இதன்படி நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் ஏற்றுமதிப் பொருளாதாரத்திலும் தமக்கு வலுவான நம்பிக்கை உள்ளது.
அத்தோடு விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியம்
எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புடன் உணவுத் தேவையும் அதிகரிக்கும். அதற்காக இந்நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தயாராக வேண்டும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: உலக அரசியலில் பரபரப்பு News Lankasri
