காலநிலை தொடர்பான மாநாடு: பூமியினை பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி பூமியினை பாதுகாக்க வேண்டும் எனவும் அதற்கு ஒரு தீர்க்கமான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற COP28 மாநாட்டில் நேற்றையதினம் (01.12.2023) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“COP28 போன்றதொரு மாநாட்டினை நடத்தியதாக ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தை நான் வாழ்த்துவதோடு உங்களது சிறப்பான விருந்தோம்பலுக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டொன்றுக்கு தேவைப்படும் நிதி
இந்த நூற்றாண்டிற்குள் புவி வெப்பநிலையானது 3 பாகை செல்சியஸ்ஸால் அதிகரிக்கும் என UNEPஆல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி தேவைப்படுகின்றது என காலநிலை நிதி தொடர்பான சுயாதீன உயர்மட்ட நிபுணர் குழு கூறுகின்றது.
காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் உலகினால் மேற்கொள்ளப்படும் போது அது அனைத்து நாடுகளுக்கும் சமமானதாக இருத்தல் வேண்டும்.
கலாநிலை மாற்றம் தொடர்பான இலங்கையின் முன்மொழிவானது, 2024 பெப்ரவரி 6 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் சபையின் 5ஆவது மாநாட்டில் முன்வைக்கப்படும்” என கூறினார்.

விடுதலைப் புலிகளைப் போல காட்டப்படும் சிறுவர்கள்: நாட்டை பறித்தது நாமா... தேரரின் இனவாத பேச்சு(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
