ரணில் தலைமையில் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடல்
ஆரம்ப கலந்துரையாடல்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழு

இந்த கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) உள்ளிட்ட முதலீட்டாளர்கள் குழுவொன்று கலந்து கொண்டிருந்தது.
தற்போதைய மின்சார நெருக்கடிக்குத் தீர்வாகவும், தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்க இலங்கை அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam