ரணில் விக்ரமசிங்க குறித்து சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து எதுவும் கோரவில்லை என ரணிலின் முன்னாள் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து சமையற்கலை நிபுணர்கள், குடைகள், வாகனங்கள் என பலவற்றை கோரியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு ஊடகவியலாளர்கள் சாகலவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்
அரசாங்கமொன்றில் ஜனாதிபதியாக, பிரதமராக அல்லது வேறும் உயர் பதவிகளை வகிக்கும் பொழுது அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் எனவும், அவர்கள் பதவியிலிருந்து விலகும் அதே நாளில் அவர்களுக்கான அச்சுறுத்தல்களும் நீங்கிடுமா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக இவ்வாறான நிலைமைகளின் போது குறித்த உயர் பதவிகளை வகித்தவர்களுக்கு ஒன்றிரண்டு மாதங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு நடைமுறை வித்தியாசமானது எனவும் அரசியல் சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி
ரணில் விக்ரமசிங்க நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார் எனவும் அவரது வீடு எரிக்கப்பட்ட நிலையில் அவர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார் எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித பாதுகாப்பினையும் கோரவில்லை எனவும் அவரது பாதுகாப்பு பிரிவினர் சில உபகரணங்களை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri