யாரிடமும் உதவி கோரப்போவதில்லை - ரணில் அறிவிப்பு
இலங்கையினால் மற்றையவர்களுக்கு சுமையில்லாத வகையில் சுய முயற்சினால் முன்னேற்றமடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடு
இலங்கை இனிவரும் காலங்களிலும் மற்றவர்களிடம் உதவி கேட்கும் நாடாக இல்லாமல் மற்றைய நாடுகளை போல சுயமாக முன்னேறக்கூடிய நாடாக மாற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய சந்தை, வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை கவர்ந்திழுப்பது தொடர்பில் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவை இலங்கை பின்பற்றும் எனவும்,வேறு நாடுகளிடம் உதவி கோராது நமக்குத் தேவையானதை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாடுகளிடம் உதவி கோருவதினை நிறுத்தி அநேகமான நாடுகளைப் போன்று நாமே நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.