மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்மு, உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து, இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை, உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ளார்.
இரங்கலை குறிப்பேட்டில் பதிவு செய்த ஜனாதிபதி
இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவு குறிப்பேட்டிலும் இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதிய ஜனாதிபதி, இரண்டாவது எலிசபெத் மகாராணி 7 தசாப்தங்களாக உலக மக்களுக்காக ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டியுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் நடைபெறும் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்விலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துக்கொள்ள உள்ளார்.

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
