ஆர்ப்பாட்டக்காரர்களும் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்துவதாக ரணில் தெரிவிப்பு
பொலிஸார் மாத்திரமன்றி போராட்டக்காரர்களும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் வியோன் சர்வதேச ஊடக நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் மாத்திரமன்றி போராட்டக்காரர்களும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பு
இவ்வாறு இருதரப்பும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதன் காரணமாக அதற்கான தேவை அதிகரித்துள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் அவற்றைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியாகக் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு 18 மாதங்கள் ஆகும்! ரணில் தகவல்
இலங்கையில் உணவுப் பற்றாக்குறை எவ்வளவு காலம் நீடிக்கும்...! பிரதமர் வெளியிட்ட தகவல்
நான் ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல! சுதந்திரமான பிரதமர் - ரணில் பதிலடி



