ரணில் ஆட்சிக்கு வந்தது ராஜபக்சவினரை பாதுகாக்க அல்ல-ஐ.தே.கட்சி
புனர்வாழ்வுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்க அல்ல எனவும் அவர் வந்து தோளில் ஏற்றி அந்த குழுவை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ரணிலின் புண்ணியத்தில் வாகனத்தில் ஏறி நாடாளுமன்றம் செல்கின்றனர்

உள்ளாடையும் பேர குளத்தில் இருந்து கரையேறிய ஆட்சியாளர்கள், தற்போது ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்தில் வாகனத்தில் ஏறி நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது, ராஜபக்சவினரை பாதுகாக்க அல்ல. ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சவினர் கூறுவதுபடி செயற்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
எவரும் வாய்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்

ஒரு சில வழிபோக்கர்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு பதிலளிக்க போவதில்லை. நிலைத்தடுமாறி போனவர்களுக்கு அது ஞாபகத்தில் இல்லை. ஒவ்வொரு கருத்துக்களை கூறுகின்றனர். எவரும் தமது வாய்களை கவனமாக வைத்துக்கொண்டு செயற்பட்டால் நல்லது எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri