அநுர அரசாங்கத்திற்கு ரணிலின் ஆலோசனை
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியாவுடனான கூட்டுறவை முதன்மை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம்
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் ஆசியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த 50வது இணையவழி கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்ப நவீனமயமாக்கல், பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச வல்லரசுகளுடனான வலுவான கூட்டாண்மை ஆகியவற்றின் மூலம் இலங்கை புதிய உலக அரசியல்-பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் இந்தியா முதன்மையான பொருளாதார சக்தியாக விளங்குவதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் முன்னணி மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரையை மேற்கோள் காட்டிய ரணில் விக்கிரமசிங்க, சாணக்கியரின் 'மச்ச நியாயம்' - பெரிய மீன் சிறிய மீனை விழுங்கும் நிலை) குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். "நாங்கள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறாவிட்டால், பெரிய மீன்களால் விழுங்கப்படுவோம்" என அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. நாட்டின் இறையாண்மைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம் என்பதால், இலங்கை தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தீவிர புயலாக வலுப்பெற்று இந்தியாவை கடந்த அர்னாப் சூறாவளி! இலங்கைக்கான பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல்