தமிழ் மக்களின் நலனுக்காகவே ரணிலுக்கு வாக்களித்தோம்: டக்ளஸ் தேவானந்தா
தமிழ் மக்களின் எதிர்கால நலனை முன்னிட்டே ஜனாதிபதி தெரிவில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்ததாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தெரிவு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஏனைய கட்சிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்களின் நலன்கள், அபிலாசைகளை புறம்தள்ளி செயற்படுகின்றன.

ஆனால் எங்களது கட்சி தமிழ் மக்களின் எதிர்கால நலன், அமைதியான வாழ்வு, நல்லிணக்கம் என்பவற்றை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையிலேயே கடந்த ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து வாக்களித்தோம். அதன் பலனை தமிழ் மக்கள் எதிர்வரும் நாட்களில் கண்டுகொள்ள முடியும்.” ன தெரிவித்துள்ளார்.
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam