எனது வீடு எரிக்கப்பட்ட போது எங்கே சென்றிருந்தீர்கள்....! கடுந்தொனியில் கேள்வி கேட்ட ரணில்
தான் பதில் ஜனாதிபதியாக இருந்த போது தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் எந்த தரப்பினரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் பல வெளிநாட்டு தூதுவர்கள் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பல தரப்பினரால் கண்டனம் வெளியிடப்பட்டு டுவிட்டர் பதிவுகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், “எனது தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் எந்த தரப்பினரும் எவ்வித டுவிட்டர் பதிவுகளையும் வெளியிடாமை குறித்து நான் ஆச்சரியமடைந்தேன்.
தற்போது கேள்வி எழுப்பும் ஒருவரும் அன்றைய தினம் ஒரு பதிவையேனும் வெளியிடவில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.