ரணில் - பசில் மீண்டும் இன்று சந்திப்பு..!
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வரும் நிலையில், அக்கட்சி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணிலுக்கும் மொட்டுக் கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவுக்கும் (Basil Rajapaksa) இடையிலான மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் இன்று (28) நடைபெறவுள்ளது.
கட்சியின் நிலைப்பாடு
முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மொட்டுக் கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்புக்கள் அண்மையில் நடந்தன. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவும் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்தால் மொட்டுக் கட்சிக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 30 வீதமும், மாகாண சபைத் தேர்தலில் 35 வீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 40 வீதமும் போட்டியிடுவதற்கான ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
எனினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 90 வீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 70 வீதமும், மாகாண சபைத் தேர்தலில் 70 வீதமும் தமது கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இதனால் இரு தரப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வருவது இழுபறியில் உள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை மொட்டுக் கட்சி நாளை (29) அறிவிக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
