பிரதமருக்கான கடமைகளை பொறுப்பேற்றார் ரணில் (Photos)
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை தனது கடமைகளை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்றைய தினம் இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதமராக நேற்று மாலை பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமராக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை 6.34 மணியளவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் பிரதமராக அவர் பதவியேற்பது இது ஆறாவது முறையாகும்.
ரணில் இன்று பிரதமர் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகியோர் தனித்தனியாக அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதன்போது"நாட்டின் நிலைமை மோசமடைவதற்கு முன்னர் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்றுள்ளேன். வெளிநாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கவேண்டும்; இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்" என்றும் இதன்போது ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
