திட்டமில்லாத ஆட்சியை நடத்திவருவதாக ரணில், அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது அக்ராசன உரையில் எடுத்துரைத்த விடயங்களை விட இலங்கை நாடு, பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்த சலுகைகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகளை செய்யவில்லை
2796. 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றிய போதிலும், மேலும் 229 மில்லியன் ரூபாய் தேவையென வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் அரசாங்கம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக மதிப்பீடுகளை முன்வைக்கப்போவதில்லை என்ற அரசாங்கம் கூறினாலும், ஜனவரி மாதத்தில் மேலதிக நிதியை ஏற்கனவே கோரியுள்ளதாக என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஆயிரம் பில்லியன் ரூபாயாக உள்ளது
எனினும் தற்போதைய அரசாங்கம் பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த அதன் திட்டங்களை விபரிக்காமல் கூடுதல் நிதி கோரியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள சலுகையை எவ்வாறு வழங்குவது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
