கைதுக்கு முன்னர் ரணில் வெளியிட்ட கருத்து! தீயாய் பரவும் ஒலிப்பதிவு
புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து வௌியிட்ட குரல் பதிவொன்றை முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த குரல் பதிவில், "நான் எப்போதும் நாட்டிற்காகவே உழைத்திருக்கிறேன். நான் தனிப்பட்ட காரணங்களுக்காக உழைத்ததில்லை.
இந்த ஆட்சியின் உண்மை இப்போது வெளிவருகிறது. எல்லா இடங்களிலும் நடைபெறும் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை." என ரணில் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ரணில் தொடர்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''இரண்டு வருடங்கள் ஒரு நாட்டை கட்டியெழுப்பிய தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பொறுப்பேற்றார்.
நாங்கள் நீதித்துறையை மதிக்கிறோம். ஆனால் யூடியூப் மக்கள் நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிய முடிவுகளை எடுத்துள்ளமை கவலை அளிக்கிறது.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் அவரது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. அவரது வீட்டை றோயல் கல்லூரிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.''என கூறியுள்ளார்.
கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(22) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரணில் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணிலை பார்வையிட சஜித், மகிந்த உட்பட முக்கியப்புள்ளிகள் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
