ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏன் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை: சிவனேசன் கேள்வி

Sri Lankan Tamils Mullaitivu Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Gota Go Home 2022
By Jenitha May 16, 2022 07:31 PM GMT
Report

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் பொருளாதாரம் சீரழிந்த பின்னர்தான் அதனை செய்யமுடியும் என்பது வேடிக்கையான விடயமாக உள்ளது என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார பிரச்சினை நீண்டகாலமாக மாறி மாறிவருகின்ற பேரினவாத அரசுகளும் திட்டமிடப்படாத பொருளாதாரத்தினை மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சிக்கு வந்த பின்னர் திறந்த பொருளாதாரத்தினை கொண்டுவருவதாக சொல்லி ஆரம்பித்ததில் இருந்து ஒருவிடயம் விளங்கவில்லை இங்குள்ள மூன்று மொழிகளையும் பேசுகின்ற மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது.

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏன் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை: சிவனேசன் கேள்வி | Ranil And The Sri Lankan Economy

மாறாக ஒரு சிறுபான்மையினரை போருக்கு அழைத்ததன் ஊடாக அவரின் திட்டம் தோல்வியில் அடைந்தது என்பது நாங்கள் அறிந்த விடயம். கடந்த காலங்களில் யுத்தத்தினை நோக்கிய கண்ணோட்டத்துடனான அரசுகள் மாறிமாறி வந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தினையோ, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலோ யாரும் காத்திரமான முடிவினை எடுக்கவில்லை.

வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்கு வருவதும் அதன் பின்னர் பேரினவாத சக்திகளின் கைக்கூலிகளாக செயற்படுவதும் தான் மாறி மாறி நடைபெற்று வந்துள்ளது. சிறந்த பொருளாதார திட்டம் எந்த அரசிடமும் இல்லை கடனை பெற்று கடனில் ஊழல் மூலம் இங்குள்ள அரசியல் வாதிகள் முதலீடாக கொண்டார்கள்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலும் ஆட்சிக்கு வருவதற்கு திட்டமிடப்பட்ட செயலா என்று பலரிடம் சந்தேகம் இருக்கின்றது.

உரத்தினை நிறுத்தியமை ஆரம்பத்திலேயே தெரிந்துள்ளது. டொலர் பிரச்சினை மிகப்பெரும் சூழ்நிலையினை ஏற்படுத்தப் போகிறது என்று பகல் கனவினை கண்டுதான் செய்தார்கள்.

இலங்கை தீவு மிகவும் வளம் பொருந்திய நாடு. நாங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை இல்லை. எங்களை விட குறைந்த வளங்களை கொண்ட நாடுகள் எல்லாம் பணக்கார நாடுகளாக இருக்கின்றது. வளங்கள் அனைத்தும் இங்கு இருக்கின்றது. நாங்கள் வளம் குறைந்தவர்களிடம் கையேந்தும் நிலைக்கு சென்றது இந்த பேரினவாத அரசியல்வாதிகளால் தான்.

இன்று சிங்கள இளைஞர்களின் போராட்டம் என்பது காலத்தின் தேவை அவர்கள் கூறுவது அரசியல் மாற்றம் அல்ல. இப்போது உள்ள நடைமுறை முற்றுமுழுதாக மாற்றப்பட வேண்டும் அரசியல் சாசனம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது தான். அவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

எங்களுடைய தமிழ் தரப்பில் இருக்கின்ற தேசிய அரசியல்வாதிகள் என தங்களை கூறிக்கொள்கின்றவர்கள் நாட்டில் இந்த நிலமை நீடிக்குமாக இருந்தால் ஒருநாள் கோட்ட கோ கோம் என்று சொல்கின்ற அரசியல்வாதி மறுநாள் ரணில் கம் கோம் என்கின்ற சூழ்நிலையினை ஏற்றுக்கொள்கின்ற ஒரு நாளில் பல்ட்டி அடிக்கின்ற நிலை இருக்கின்றது.

தமிழ் மக்களின் தேவை என்ன?, பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பான போராட்டத்தின் தன்மையினை புரிந்துகொள்ளவில்லை என்று நான் நினைக்கின்றேன். அவர்களும் இந்த மேட்டுக்குடி சிங்களவர்களுடன் சேர்ந்து இந்த போராட்டத்தினை காட்டிக்கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதில் நாங்கள் தவறு செய்வோமாக இருந்தால் இளைஞர்களால் எடுக்கப்பட்ட இந்த போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு இங்கே இருக்கின்ற தமிழ் தலைவர்கள் துணைபோவார்களாக இருந்தால் வரலாற்றிலே மிகப்பெரிய ஒரு பழியினை தமிழ்மக்கள் மீதும் இந்த தலைவர்கள் மீதும் கொண்டுவரும் என்பதில் அவதானமாக இருக்க வேண்டும்.

இன்று பலர் கூறுகின்றார்கள் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். அவர் ஐந்து முறை பிரதமராக இருந்து ஆறாவது முறை பிரதமராக இருக்கின்றார் என்று கூறிக்கொள்பவவர்கள். அவர் ஐந்து முறை பிரதமராக இருந்த ஒருவர் ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை பொருளாதாரம் சீரழிந்த பின்னர்தான் அதனை செய்யமுடியும் என்பது வேடிக்கையான விடயம். ஐந்து முறை பிரதமராக இருந்த ஒருவர் தமிழ்மக்களுக்கு எதுவும் செய்யவில்லை அவர்களின் போராட்டத்தினை அழிப்பதில் பங்களித்திருக்கின்றார்.

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏன் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை: சிவனேசன் கேள்வி | Ranil And The Sri Lankan Economy

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு அவர் வந்து அவருக்கு பின்னால் பலர் சென்று தமிழர் பிரச்சினையினை சிறிதளவும் நகர்த்த முடியாமல் தோல்வியடைந்த தமிழ் தலைமைகள் மீண்டும் ரணிலை கொண்டு வருவதன் மூலம் தமிழ்மக்களுக்கு ஏதாவது செய்துவிட முடியும் என்று சொல்வது அவர்களின் சந்தர்ப்பவாத போக்கினைத்தான் நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இனியும் இவ்வாறான தலைமைகளை நாங்கள் பின்பற்றுவதா என்பது இளைஞர் மட்டத்தில் சிந்திக்க வேண்டிய விடயம். சிங்கள இளைஞர்கள் மத்தியில் சிறந்த நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கரு அவர்கள் மத்தியில் தோன்றியுள்ளதோ அதேபோன்று எங்கள் இளைஞர்கள் மத்தியிலும் இதற்கான சரியான முடிவை தேர்ந்தெடுக்க வேண்டிய காலகட்டம் இன்று இருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏன் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை: சிவனேசன் கேள்வி | Ranil And The Sri Lankan Economy

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US