ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும்! ரவி கருணாநாயக்க வலியுறுத்து
ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கட்சிகளை இணைக்கும் முயற்சி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ரணில் விக்ரமசிங்க தலைமைப் பதவியில் இருந்து விலகுகின்றாரா? இல்லையா? என்பது முக்கியம் அல்ல. அவரும், சஜித்தும் இணைந்து செயற்பட வேண்டியதுதான் முக்கியம்.

ஒன்றிணைவுக்காகவே நானும் பாடுபட்டு வருகின்றேன். எனினும், அதனை நான் வெளியில் காட்டிக்கொண்டு பிரசாரம் தேடவில்லை.
அதேபோல் சிறு கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்த பின்னர் ஏனைய சிறு கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சிறப்பான ஆரம்பம் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri