ரணிலின் சூழ்ச்சியில் நிலைகுலையும் சஜித் அணி - ஆபத்தான நபராக அனுர
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் தமது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் மே தினம் கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு மிகவும் முக்கியமானதென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமகாலத்தில் அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ளன. இதன் பின்னணில் அரசியல் சூழ்ச்சிகளில் தலைசிறந்து விளங்கும் ரணில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் பலம்
தற்போதைய நிலையில் அரசியல் பலத்தை அதிகரித்து காட்ட வேண்டிய காட்டாயத்தில் ரணில் உள்ளார். அதேவேளை தம்வசம் உள்ள உறுப்பினர்களை பிளவுபடாமல் பாதுகாக்க வேண்டிய நிலைமை சஜித்திற்கு ஏற்பட்டுள்ளது.
சஜித் தரப்பிலுள்ளவர்களை தன்பக்கும் ஈர்க்கும் மந்திராலோசனைகளில் ரணில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். பல விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளதாகவே கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க அணியில் பலம் பொருந்தியவர்களின் பெயர்களை கூறி வரும் சஜித் அணியினர், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய தயாராக இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துகோரள, கபீர் ஹாசிம், எரான் விக்கிரமரத்ன ஆகியோரின் பெயர்கள் பிரபலமடைந்துள்ளன.
மஹிந்த தரப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பு மற்றும் ரணில் தரப்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாராளர்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்ற கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் மறுபுறத்தல் சவால்மிக்கவராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |