மலையக மேதினக் கூட்டங்களில் ஏட்டிக்குப் போட்டியாக கலந்து கொள்ளும் ரணில் மற்றும் சஜித்
இன்று இடம்பெறவுள்ள மேதினக் கூட்டங்களில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் மே தினக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஜனாதிபதி ரணில் மாத்திரமன்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மலையகத்தில் இடம்பெறும் வேறு கட்சிகளின் மேதினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டக்கலை மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளார்.
கொட்டக்கலை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி கொழும்பில் நடைபெற உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொழிலாளர் தேசிய சங்கம் தலவாக்கலையில் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்தில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்க உள்ளார்.
அந்த கூட்டத்தின் பின் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள மே தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |