ஜனாதிபதி சஜித்திற்கு வழங்கியுள்ள அறிவுரை
எந்தவொரு நபருடனும் விவாதம் செய்யத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) ஆகியோருக்கு இடையிலான விவாதம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அனுரகுமாரவின் சவாலை சஜித் பிரேமதாச(Sajith Premadasa) ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பகிரங்க விவாதமொன்றை நடாத்துவது தொடர்பில் அனுரகுமார, சஜித்திற்கு விடுத்த சவால் காலம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது.
இந்த சவாலை ஏற்றுக்கொண்டு சஜித் விவாதத்திற்கு சென்றிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபருடனும் விவாதம் செய்யத் தாம் ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் நாடாளுமன்றிற்கு வந்து தம்முடன் வாதம் செய்ய முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |