ரணில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை: அரசாங்கத்திற்கு அறிவுரை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை வரையறுத்துக் கொள்வதற்கு இந்து சமுத்திர பிராந்திய வலய நாடுகளின் அரச தலைவர்களுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பேச்சுவார்த்தையின் நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகில் நிலவிவரும் போர் சூழல் உள்ளிட்ட சில முக்கிய காரணிகள் தொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் குண்டுத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் மறுபுறத்தில் ஈரான் பிராந்திய வலயத்தின்ய உறுப்பு நாடுகள் மீதே தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஈரான் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவத்தினர் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் ஊடாக எமது சமுத்திர பகுதியில் தாக்கி அளித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எவ்வித எதிர்வினையோ அல்லது குறைந்தபட்ச பொறுப்பு கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை எனவும் இதன் ஊடாக இன்று எங்களுக்கான அங்கீகாரம் கிடையாது என்ற நிலைமை வெளிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஐரோப்பிய நாடுகளும் ஒன்றுடன் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இந்து சமுத்திர பிராந்திய வலய நாடுகளில் அவ்வாறான எந்த ஒரு நிலைமையையும் அவதானிக்க முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் தனிப்பட்ட ரீதியான பேச்சு வார்த்தைகள் இன்றி நாம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பை கட்டி எழுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
நாம் அடிக்கடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் மற்றும் சமுத்திர பாதுகாப்பு, வாணிபம், பொருளாதாரம், மீன்பிடித்துறை, விவசாயம், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரச தலைவர் மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் முன்மொழிவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாம் துறைமுக வசதிகளை விஸ்தரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இன்று உலக நடவடிக்கைளில் இருந்து விலகிச் செல்வதாகவும் அது ஒரு புறத்தில் பிராந்திய வலயத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்து சமுத்திர பிராந்திய வலய நாடுகள் ஓர் திட்டத்தை முன்னெடுக்க கூடிய சந்தர்ப்பம் உண்டு என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri