ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதியை கலைக்கும் உத்தரவு
அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
