புதிய ஜனாதிபதிக்குள்ள சவால் - ரணில் வெளியிட்ட தகவல்
நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களை காப்பாற்ற முனைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் முரண்பாடு ஏற்படும்.
நாட்டின் பொருளாதாரம்
சர்வதேச நாணய நிதியம் கோபப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதே தனது முதன்மையான நோக்கம் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே சர்வதேச நாணய நிதியத்தினால் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதன் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.