ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ரங்கன் குடியிருப்பு மக்கள் ( PHOTOS)
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்பாட்டில் ஆர்ப்பாடம் இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் குறித்த பாதையில் உள்ள பாலத்தினை புதிதாக அபிவிருத்தி செய்து தருவதாக கடந்த மார்ச் மாதமளவில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவினால் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மழை காலம் வருவதற்கு முன்னர் புதிய பாலம் அமைத்து தருவதாக கூறி பயன்பாட்டிலிருந்த குறித்த பாலத்தினை முற்றாக அகற்றியுள்ளனர். பாலம் அகற்றப்பட்டு பல மாத காலம் கடந்த நிலையிலும் பாலம் புனரமைப்பதற்கான எந்த விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் மக்கள் இன்று போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மக்கள் வைத்தியசாலைக்கு செல்வதாயின் இப்பகுதிக்கு நோயாளர் காவு வண்டி செல்ல முடியாத நிலையிலுள்ளதுடன், நீண்ட தூரம் நடந்து சென்று நோயாளர் காவு வண்டியில் செல்ல வேண்டி உள்ளதாகவும், மேலும் பாடசாலை மாணவர்கள் சுத்தமான உடை அணிந்து செல்ல முடியாத நிலையும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதன் காரணமாக, தமது பகுதியில் வீதிகள் மிகவும் சேதமடைந்துள்ளதுடன், தற்பொழுது தனியார் ஒருவரினது காணியின் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam