இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய திறைசேரி அதிகாரியின் மரணம்! உதயகம்மன்பில மீது அதிகாரியின் மனைவி முறைப்பாடு
திறைசேரியின் வெளிவளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம். ரங்க நிஷாந்த ராஜபக்சவின் மனைவி, பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
அவரது அகால மரணம் குறித்து சமூக ஊடகங்களிலும் பல்வேறு நபர்களாலும் பதிவிடப்பட்ட கருத்துக்களால் தமக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி, குளியாபிட்டிய பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
ரங்க நிஷாந்தவின் மரணம்
மேலும், கடந்த மே 6ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாட்டில், தனது கணவரின் மரணம் குறித்து தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில உள்ளிட்ட ஒரு குழுவினர், அந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறிய கருத்துக்களால், தானும் தனது குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மன உறுதியற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு விரிவான விசாரணையை நடத்தி, அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதய கம்மன்பில
அதன்படி, ரங்க நிஷாந்தவின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறிய உதய கம்மன்பில மற்றும் மேலும் பல நபர்கள் பிரேத பரிசோதனைக்காக சாட்சிகளாக நீதிமன்றத்தில் அழைக்கப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதே சமயம், அது தொடர்பான கூற்று குறித்து விசாரணைக்காக, மே 9ஆம் திகதி காலை 10.00 மணிக்கு குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கம்மன்பிலவுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, தமக்கு உள்ள ஆதாரங்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam