வவுனியாவில் சீரற்ற காலநிலை: 10 வீடுகள் சேதம்
வவுனியாவில் பெய்த கடும் மழை மற்றும் காற்றினால் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் அழிவடைந்துள்ளன.
வவுனியாவில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வவுனியா இராசேந்திரங்குளம், சூடுவெந்தபுலவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், சில வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை அரபாத் நகர்ப் பகுதியில் வீசிய கடும் காற்றினால் செய்கை பண்ணப்பட்டிருந்த வாழை மற்றும் பப்பாசி போன்ற பயிர்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களைச்
சேகரித்து வருகின்றனர்.






அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
