பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) தள்ளுபடி செய்துள்ளது.
பிரசன்ன ரணவீர தான் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் குறித்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மனு தள்ளுபடி
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியொன்றை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்யத் தயாராகி வருவதாக பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரசன்ன ரணவீர இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |