நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video)

Sri Lanka Upcountry People Batticaloa Vavuniya Sri Lankan Peoples Iftar
By Kajinthan Apr 22, 2023 02:48 PM GMT
Report

இஸ்லாமியர்கள் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான்று கொண்டாடப்படும் ஈகைத் திருநாளான நோன்பு பெருநாளினை உலக வாழ் இஸ்லாமிய மக்கள்  இன்று (22.04.2023) கொண்டாடி வருகின்றனர்.  

இந்நிலையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு யாழ்.பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றது.

யாழ்.பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் மெளலவி ஆர்.எச்.ஆஹிக் ஜமால் தலைமையில் தொழுகை நடைபெற்றது.

இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த இஸ்லாமியர்கள் துவா,குப்தா பிராத்தனையில் ஈடுபட்டனர். 

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

மலையகம்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு மலையகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று நோன்பு பெருநாள் தொழுகைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை மௌலவி சாஜகான் தலைமையில் இன்று காலை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றது.

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பெரு மக்கள் இன்று காலை முதல் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவமளித்து பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர். 

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

இந்த பெருநாள் தொழுகையில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டி துவா தொழுகையும் இடம்பெற்றது.

குறித்த பெருநாள் தொழுகையின் போது பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி-மலைவாஞ்சன்,திருமாள்


அம்பாறை 

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today  

புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (22) காலை நடைபெற்றது.

இதன்போது அஷ்செய்க் ஏ.ஆர் நுவீஸ் (மக்கி) தொழுகை நடத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

செய்தி-பாறுக் ஷிஹான்

வவுனியா

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

வவுனியாவில் நகர பள்ளிவாசல் உட்பட பல்வேறு பகுதிகளில் நோன்பு பெருநாள் விசேட தொழுகை இன்று இடம்பெற்றிருந்தது.

இஸ்லாமியர்களின் விசேட தினமான ரமழான் நோன்பு பெருநாளான இன்றையதினம் வவுனியா பட்னிச்சூர் முஹிய்ப்த்தீன் பள்ளிவாசலில் காலை 7.10 மணிக்கு விசேட தொழுகை இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

பள்ளிவாசலின் பிரதான மௌலவி அலாவுதீனால் விசேட தொழுகை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், பெருந்திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தங்களுக்குள் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் வவுனியாவில் அனைத்து பள்ளிவாசல்களிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

செய்தி-திலீபன்

திருகோணமலை

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் நோன்பு பெருநாள் தொழுகைகள் கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றன.

ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் தொழுகைகள் இடம்பெற்றன.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசலுக்கு சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

பெருநாள் தொழுகைகளை பேஷ் இமாம் ஏ.ஆர்.ஜவாஹிர் மௌலவி நிகழ்த்தினார்.

பள்ளிவாசலுக்கு வெளியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

செய்தி-முபாரக்

புத்தளம்

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

நோன்புப் பெருநாள் தொழுகை புத்தளம் கருத்தரவை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது.

குறித்த பெருநாள் தொழுகை இமாம் மின்ஹாஜினால் தொழுவிக்கப்பட்டது.

இந்த பெருநாள் தொழுகையில் அதிகளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பொலிஸாரினால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டமையும் காணக்கூடியதாக இருந்தது.

செய்தி-அஷார்

மட்டக்களப்பு

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில் இன்று (22.04.2023) ஈடுபட்டனர்.

இதனடிப்படையில் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலாள பெருநாள் தொழுகை இன்று காலை 06.45 மணிக்கு வாழைச்சேனை அந் நூர் தேசியபாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் பேஷ்இமாம் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸம்மில் நடத்தினார். 

செய்தி-நவோஜ்

மன்னார் 

மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் சனிக்கிழமை(22) நோன்பு பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.


காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.

செய்தி-ஆஷிக்

ஏறாவூர்

புனித நோன்பு பெருநாள் தொழுகை  ஏறாவூரில் திடல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை (22.04.2023) இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ரமழான் பண்டிகை (Video) | Ramzan Big Day Prayer Today

ஏறாவூர் அல் மர்க்கஸில் இஸ்லாமி அமைப்பினரால் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மைதானத் தொழுகைக்காகவென ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.

நிகழ்வில் தொழுகையும் பிரச்சாரமும் இடம்பெற்றது. 

செய்தி: ருசாத்

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US